தமிழக முதல்வர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் ஹாங் ஃபூ குழுமத்தின் தோல் பொருள் சாராத காலணி மற்றும் தடகளப் பயன்பாட்டுக் காலணிகள் தயாரிப்பு ஆலையினை அமைக்கச் செய்வதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
தமிழ்நாடு திட்ட ஆணையத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் J.ஜெயரஞ்சன், அந்த ஆணையத்தினால் தயாரிக்கப்பட்ட வரைவுக் கொள்கைகள் மற்றும் அறிக்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது, சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் (MDRF) இணைந்து நாட்டில் முதல் முறையாக நீரிழிவு நோய்க்கான உயிரி வங்கியை சென்னையில் நிறுவியுள்ளது.
மால்டோவா குடியரசு ஆனது, சர்வதேச சூரியசக்தி கூட்டணி அமைப்பின் 121வது உறுப்பினராக இணைந்துள்ளது.
பிரிட்டன் நாடானது, பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை வர்த்தக அமைப்பிற்கான விரிவான மற்றும் பல்வேறு முற்போக்கு அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் (CPTPP) அதிகாரப்பூர்வமாக இணைந்ததுடன், இந்த ஒப்பந்தத்தில் இணைந்த முதல் ஐரோப்பிய உறுப்பினராகவும், 12வது உறுப்பினராகவும் மாறி உள்ளது.
22வது திவ்ய கலா மேளா நிகழ்வானது 'Empowered Divyangjan' என்ற கருத்துருவின் கீழ் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது (NHAI) வாகனங்கள், பாதசாரி நடைபாதைகள், சாலைப் போக்குவரத்து குறித்த அடையாளங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புச் சொத்துக்கள் உட்பட விரிசல்கள் மற்றும் பள்ளங்கள் மற்றும் பிற கூறுகளை ஆய்வு செய்து அடையாளம் காண்பதற்காக 'ராஜ்மார்க் சாத்தி' என்ற புதிய வழித்தட ரோந்து வாகனங்களை (RPVs) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் பிரத்தியேக யோகா கொள்கையினை அறிமுகப்படுத்தச் செய்ததோடு உத்தரகாண்ட் மாநிலமானது உலகளாவிய யோகா மையமாக மாற உள்ளது.