பாரத ஸ்டேட் வங்கியானது பிரசாந்த் குமாரை தனது வங்கியின் தலைமை நிதியியல் அதிகாரியாக (CFO - Chief Financial Officer) நியமித்துள்ளது. இதற்குமுன், இவர் பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண் இயக்குநர் (மனித வளம்) மற்றும் பெருநிறுவன வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றினார்.
இதற்குமுன் இப்பதவி வகித்த அன்சுலா காந்த் பாரத் ஸ்டேட் வங்கியின் மேலாண் இயக்குநராக பதவி உயர்வு பெற்றதையடுத்து, இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டிற்கான வோஸ்டோக் பயிற்சித் தொடரை செப்டம்பர் 17 அன்று ரஷ்யா நிறைவு செய்தது. இப்பயிற்சி முதல்முறையாக சீனப் படைகளையும் சேர்த்துக் கொண்டது.
இந்திய - அமெரிக்கரான பீமல் படேல் நிதி நிறுவன அறங்காவலர்களின் துணைச் செயலாளராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக கிரீஷ் இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக தஜீந்தீர் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.