வரலாற்றாசிரியர் A.R.வெங்கடாசலபதி, தனது திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்ற புத்தகத்திற்காக 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப் பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
‘சுகாதாரமும் பருவநிலை மாற்றமும்’ என்ற தலைப்பிலான தமிழ்நாடு கருத்தரங்கம் ஆனது சென்னையில் நடைபெற்றது.
இந்திய ராணுவம் ஆனது ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இரண்டாவது தரைப்படை உச்சி மாநாட்டில் (LFS- 2024) பங்கேற்றது.
டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்தியத்திற்கான மத்திய அரசின் காற்றுத் தரக் குழுவானது, சாதகமற்ற ஒரு வானிலை காரணமாக காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் அங்கு காற்று மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மும்பை கிரிக்கெட் அணியானது மத்தியப் பிரதேச கிரிக்கெட் அணியினை வீழ்த்தி அதன் இரண்டாவது சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்றுள்ளது.
அடுத்து புதிதாக உருவாக்கப்பட உள்ள தலைநகரான அமராவதியின் உருவாக்கப் பணிகளுக்கான 24,276 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆந்திரப் பிரதேச தலைநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் (APCRDA) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் SLINEX 2024 எனப்படுகின்ற இருதரப்புக் கடற்படைப் பயிற்சியானது விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள செமேரு எரிமலை சமீபத்தில் வெடித்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1973 ஆம் ஆண்டில் அரபு மொழியை அதன் ஆறாவது அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்ட தினத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 18 ஆம் தேதியன்று அரபு மொழி தினம் கொண்டாடப் படுகிறது.