2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆனது ஜனவரி 06 ஆம் தேதி வழக்கமான ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) ஆனது, மாநிலத்தில் உள்ள 17 SIPCOT தொழிற்துறைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்குவதற்காக வேண்டி சென்னையின் FICCI-FLO நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தேவனுரா மகாதேவாவுக்கு தமிழக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான மதிப்பு மிக்க வைக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொட்டப்பட்ட உயிரி மருத்துவ மற்றும் கலப்பு திடக்கழிவுகளை அகற்றுமாறு கேரள அரசு மற்றும் கேரள மாநிலக் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (KSPCB) தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 19 வயதான இந்திய-அமெரிக்கரான கெய்ட்லின் சாண்ட்ரா நீல், 2024 ஆம் ஆண்டு இந்திய அமெரிக்க அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.
சீன டியாங்காங் விண்வெளி நிலையத்தின் இரண்டு விண்வெளி வீரர்களான காய் சூஷே மற்றும் சாங் லிங்டாங் ஆகியோர் ஒன்பது மணி நேர விண்வெளி பயணத்தை நிறைவு செய்து புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மூத்தோர் நிலை தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளன.
சுமார் 50 ஆண்டுகளில் முதல் முறையாக கர்நாடகா அதன் முதல் ஆடவர் பட்டத்தைப் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு ஆனது 20,000 கோடி ரூபாயைத் தாண்டியதையடுத்து, 2019 ஆம் ஆண்டில் 23வது இடத்தில் இருந்த இந்தியா, உலகளவில் 3வது பெரிய திறன்பேசி ஏற்றுமதியாளராக முன்னேறி உள்ளது.
முதலாவது இந்திய கடல்சார் பாரம்பரிய மாநாடு (IMHC 2024) எனப்படும் ஒரு முக்கிய நிகழ்வானது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தினால் (MoPSW) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயோகான் குழுமத்தின் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, இந்தியாவில் உயிரியியல் சார் பொருட்களின் உற்பத்தி இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கியதற்காக இந்தியத் தர நிர்ணயச் சங்கத்தின் (ISQ) மதிப்புமிக்க ஜாம்செட்ஜி டாடா விருதை பெற்றுள்லார்.
கட்டுமானப் பணிகளின் போது செயல்படுத்தப்பட்ட மகத்தானப் பாதுகாப்பு நெறிமுறைகளை வெகுவாக அங்கீகரித்து அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோவிலுக்கு பிரிட்டிஷ் பாதுகாப்பு சபையின் 'கௌரவ வாள்' விருது வழங்கப் பட்டுள்ளது.