சென்னையில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான இரவீந்திரன் குமேரனுக்கு சமீபத்தில் எடை இழப்பு/ வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சைக்கான உலகளாவிய மருத்துவச் சிறப்பு விருது லண்டனில் வழங்கப்பட்டுள்ளது.
தமது பணியின் போது உயிரிழந்தப் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசானது ஆணை பிறப்பித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை விமான ஓடுபாதையில் சுமார் 6 மாத காலத்திற்கு என்று ஆளில்லா விமானங்களின் திரள் சோதனைகளை நடத்தச் செய்வதற்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (CASR) தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற (2023) மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற பைகா பழங்குடியின கலைஞர் ஜோதையா பாய் சமீபத்தில் காலமானார்.
ஜம்மு காஷ்மீர் மாநில குப்வாரா, பாரமுல்லா மற்றும் பந்திப்பூர் மாவட்டங்களின் ஏழு எல்லையோரக் கிராமங்களில் தமது கைபேசி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக பாரதி ஏர்டெல் மாறியுள்ளது.