TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2024 29 days 93 0
  • நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் ஆனது, நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில்  உள்ள காங்கேசன்துறை ஆகியவற்றுக்கு இடையே 150-200 டன்கள் சுமந்து செல்லும் திறன் கொண்ட சிறிய சரக்குப் போக்குவரத்து கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது.
  • மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 200க்கும் மேற்பட்ட கவிதைகள் மற்றும் பிற இலக்கியப் படைப்புகள் ஆனது காப்புரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளது.
  • வடகிழக்கு சபையின் (NEC) 72வது முழு அளவிலான கூட்டம் ஆனது திரிபுராவின் அகர்தலா நகரில், 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக நடத்தப் பட்டது.
  • உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் B.லோகூர் ஐக்கிய நாடுகள் சபையின் உள் நீதிமன்றச் சபையின் தலைவராக 2028 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்