2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டு வந்திருந்தாலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து குழந்தையினையும் தேர்ச்சி பெறச் செய்யும் நடைமுறை தொடரும்.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் திறன் பேசிகள், வரைப் பட்டிகைகள், கைக் கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய சாதனப் பொருட்களுக்கான அடுத்தத் தலைமுறைத் தொழில் நுட்பம் சார்ந்த Amoled திரைகளை உருவாக்குவதற்கு ஓர் ஆராய்ச்சி மையத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் எய்ம்ஸ் போன்ற சில முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் இளங்கலை (UG) படிப்பிற்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலமானது, அதன் செழுமையான பாரம்பரியம், வனவிலங்குகள் மற்றும் கண் கவர் நிலப்பரப்புகளைச் சிறப்பித்துக் காட்டும் வகையில் வால் ஸ்ட்ரீட் இதழால் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவியச் சிறப்புப் பெற்ற இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான அணி வகுப்புக் காட்சி வாகனங்களின் கருத்துருவாக, “Swarnim Bharat: Virasat aur Vikas” (பொன் மயமான இந்தியா : பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என்பதை அறிவித்துள்ளது.
இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் ஆனது நாட்டின் முதல் சுழிய அளவிலான கழிவு வெளியேற்றம் கொண்ட ஒரு விமான நிலையமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
OpenAI ஆனது Sora எனப்படுகின்ற அதன் ஒளிப்படக் காட்சி உருவாக்க மாதிரியினை அறிமுகப் படுத்தியுள்ளதோடு உரை, படம் மற்றும் ஒளிப்படம் போன்ற உள்ளீடுகளை பெற்று புதிய ஒளிப்படக் காட்சியினை வெளியீடாக உருவாக்கும் வகையில் அது நன்கு வடிவமைக்கப் பட்டுள்ளது.
புது டெல்லியில் இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இது போன்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
கூகுள் நிறுவனமானது, சமீபத்தில் வில்லோ என்ற குவாண்டம் சில்லினை வெளியிட்டு உள்ளதோடு அதன் முந்தைய சில்லுகளில் உள்ள பிழை உருவாக்க வாய்ப்புகளை இது குறைத்துள்ளது.
வில்லோ ஆனது இன்றைய அதிவேக மீத்திறன் கணினிகள் 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் ஒரு கணக்கீட்டை ஐந்து நிமிடங்களுக்குள் செய்து விடும் திறன் கொண்டது.