தமிழ்நாடு அரசானது, 2030 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் 50% ஆற்றல் நுகர்வினைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து பெற வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS) ஆனது, ஒரே நேரத்தில் 567 நபர்களுக்கு வர்மம் சிகிச்சையளித்து கின்னஸ் சாதனையைப் படைத்து உள்ளது.
பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் மசலியில் உள்ள 199 வீடுகளிலும் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்யும் மேற்கூரைத் தகடுகளைப் பொறுத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து நாட்டின் முதல் "எல்லைப்புற சூரிய மின்னாற்றல் உற்பத்தி கிராமமாக" மாறி உள்ளது.
இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, பாதுகாப்பான மற்றும் தேவையற்ற செய்திகள் அல்லாத குறுஞ்செய்தி அனுப்பும் சூழலை உருவாக்குவதற்கான ஒரு முக்கியப் படிநிலையாக அனைத்து வணிக ரீதியான குறுஞ் செய்திகளின் தோற்றுருவினைக் கண்டறியும் ஒரு கட்டமைப்பை மிக வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான REC லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு, அதன் சிறப்பான பெருநிறுவன நிர்வாகத்திற்காக 2024 ஆம் ஆண்டின் தங்க மயில் (கோல்டன் பீகாக்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழி எழுத்தாளர் சூர்யபாலா, தனது “Kaun Des Ko Vasi: Venu Ki Diary” என்ற ஒரு புதினத்திற்காக 34வது வியாஸ் சம்மான் (2024) விருதினைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் ஜவுளித் துறை அமைச்சகமானது, SASMIRA கூட்டமைப்புடன் இணைந்து, குஜராத்தின் நவ்சாரி எனுமிடத்தில் பருவநிலை நெகிழ் திறன் மிக்க அணுகுமுறைகள் கொண்ட வேளாண் சார் ஜவுளி செயல்விளக்க மையத்தினைத் தொடங்கியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் 10வது சர்வதேச வனக் கண்காட்சி நடைபெற்றது.
குஜராத்தில் உள்ள குறைகடத்தி உற்பத்தி நிறுவனமான சுசி செமிகான், சூரத் நகரில் அம்மாநிலத்தின் முதல் வகையான ஒப்பந்தச் சேவை அமர்த்தம் சார்ந்த குறைகடத்தி ஒருங்கு சேர்ப்பு மற்றும் சோதனை (OSAT) மையத்தினைத் தொடங்கியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத் தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தின் (HPNLU) துணைவேந்தர் பிரித்தி சக்சேனாவிற்கு, உயர்கல்வி மற்றும் கல்வித் துறையின் தலைமைத்துவத்தில் அவர் ஆற்றியப் பெரும் பங்களிப்பைப் பாராட்டி, லக்னோவில் உள்ள சரஸ்வதி சங்கீத் அகாடமியின் மதிப்புமிக்க ‘சரஸ்வதி சம்மான்-2024’ விருது வழங்கப்பட்டுள்ளது.
அடல் புத்தாக்கத் திட்டம் (AIM), நிதி ஆயோக், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் சிட்டி ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், Youth Co:Lab நிறுவனத்தின் ஏழாவது தேசிய அளவிலான பெரும் சவால் போட்டியானது (2024-2025) தொடங்கப் பட்டுள்ளது.
இந்தியா உட்பட 39 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இலவச நுழைவு இசைவு சீட்டு பயண வாய்ப்பினை வழங்குகின்ற, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ள புதிய நுழைவு இசைவு சீட்டுக் கொள்கையை இலங்கை அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற இந்தியக் கல்வியாளர் அருண் கபூருக்கு பூடான் நாட்டின் 117வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெயேல் அவர்களால் 'புரா மார்ப்' (red scarf) மற்றும் 'பதாங்' (சம்பிரதாய வாள்) ஆகியவை வழங்கப்பட்டன.
இந்தியாவில் முதன்முறையாக, 2025 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியை புது டெல்லி நடத்த உள்ளது.
பாலிவுட் நடிகரான சல்மான் கான், புது டெல்லியில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு கோ கோ உலகக் கோப்பை போட்டிக்கான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.