மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலிலும், கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் தமிழக முதல்வர் நாள் முழுவதும் வழங்கப் படுகின்ற அன்னதான சேவையினைத் துவக்கி வைத்தார்.
சென்னையின் நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் 48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
SWITCH மொபிலிட்டி லிமிடெட் நிறுவனமானது (அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம்), SWITCH EiV12 - இந்தியச் சந்தைக்கான முதல்முறையான தாழ்தள மின்சார நகரப் பேருந்து – எனப்படுகின்ற அதன் சமகால மின்சாரப் பேருந்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் அது உலக அளவில் விரிவடைவதற்கான உந்துதலாக இருந்தவருமான ஜப்பான் நாட்டின் ஒசாமு சுசுகி சமீபத்தில் காலமானார்.
மத்திய அரசானது பால் பொருட்கள் மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதிதாக நிறுவப்பட்ட சுமார் 10,000 பல்நோக்கு முதன்மை வேளாண் கடன் சங்கங்களை (MPACS) தொடங்கியுள்ளது.