மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது, 2025 ஆம் ஆண்டினை ‘சீர்திருத்த ஆண்டாக’ அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவையானது, ஒரு மெட்ரிக் டன்னுக்கு 3,500 ரூபாய் என்ற விகிதத்தில் டைஅமோனியம் பாஸ்பேட் (DAP) உரத்திற்கு வழங்கப்படும் ஒற்றை முறைச் சிறப்பு மானியத்தினை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது.
இந்திய எஃகு ஆணையம் நிறுவனம் (SAIL)ஆனது, இந்தியாவின் கிரேட் பிளேஸ் டு வொர்க் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தினால், தொடர்ந்து இரண்டாவது முறையாக 'வேலை செய்வதற்கான சிறந்த இடமாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் துறை அமைச்சகம் ஆனது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் வகையில் 3வது “விராசத் புடவை திருவிழா 2024” என்ற மாபெரும் நிகழ்வினை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.