2025 ஆம் ஆண்டின் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்வு ஆனது, புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடத்தப் பட்டது.
மொத்த விற்பனை விலைக் குறியீடுக்கான (WPI) அடிப்படை ஆண்டினை 2022-23 ஆக மாற்றியமைப்பதற்காக நிதி ஆயோக் அமைப்பின் டாக்டர் ரமேஷ் சந்த் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வருங்கால வாய்ப்பு நிதி ஓய்வூதியங்களை வழங்கச் செய்வதற்காகப் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய வழங்கீட்டு முறையை (CPPS) முழு அளவில் செயல்படுத்தி முடித்துள்ளது.
சோமாட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விரைவு வர்த்தக சேவை வழங்கீட்டு தளமான பிளிங்க்இட், 2000 ரூபாய் தொகையில் 10 நிமிட அவசர கால மருத்துவ ஊர்தி சேவையை அரியானாவின் குருகிராமில் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களில் Wi-Fi (அருகலை) சேவை வழங்கும் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.