தமிழக முதல்வர் சர் ஜான் மார்ஷல் சிலைக்கான அடிக்கல்லினை நாட்டியதுடன் சிந்து சமவெளி நாகரிக மாநாட்டினையும் தொடங்கி வைத்தார்.
1988 ஆம் ஆண்டில் இராஜீவ் காந்தி அரசினால் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்ட சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய புத்தகமான "The Satanic Verses" தற்போது டெல்லி புத்தகக் கடைகளில் கிடைக்கப் பெறுகிறது.
ஜப்பானில் ஹோண்டா மோட்டார் மற்றும் நிசான் மோட்டார் ஆகிய மகிழுந்து நிறுவனங்களானது அவற்றின் சாத்தியமான இணைப்புக்கான ஒரு முழு அளவிலான பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விருது விழாவில் (AIFF) மூத்த திரைப்பட இயக்குனர்-எழுத்தாளர் சாய் பரஞ்ச்பே என்பவர் பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற உள்ளார்.