ஜம்மு மற்றும் காஷ்மீரின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பினை மிக மேம்படுத்தும் வகையில், ஒரு புதிய ஜம்மு இரயில்வே கோட்டத்தினை (இந்தியாவின் 69வது) பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபையானது (AICTE), இந்தியாவினை செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய முதன்மைத்துவம் பெறச் செய்வதற்காக என்று 2025 ஆம் ஆண்டை "செயற்கை நுண்ணறிவு ஆண்டாக" நியமித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் முதன் முறை ஆக நடைபெற உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் புது டெல்லியில் தீவு மேம்பாட்டு முகமையின் (IDA) 7வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
புது டெல்லியின் பாரத மண்டபத்தில் கிராமீன் பாரத் மஹோத்சவ் 2025 நிகழ்வினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
18வது பிரவாசி பாரதீய திவாஸ் மாநாடு ஆனது, ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் “Diaspora's Contribution to a Viksit Bharat” என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்று வருகிறது.
82வது வருடாந்திர கோல்டன் குளோப் விருது விழாவானது அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் எனுமிடத்தில் உள்ள பெவர்லி ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெற்றது.