ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 05 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.
தமிழக அரசு ஆனது, காங்கிரஸ் தலைவர் K.V. தங்கபாலுவினை 2024 ஆம் ஆண்டிந பெருந்தலைவர் காமராஜர் விருதிற்குத் தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகம் ஆனது சென்னை அருகே உள்ள முட்டுக்காடு உப்பங்கழியில் திறக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசானது, V.நாராயணனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) புதியத் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் நியமித்து உள்ளது.
புனேவைச் சேர்ந்த ஒரு புத்தொழில் நிறுவனமான ஆத்ரேயா இன்னோவேஷன்ஸ் என்பது, ஆயுர்வேத பயிற்சியாளர்களுக்காக, நோயாளிகளின் ஆரோக்கியத்தினை 22 அளவுருக்கள் மூலம் கண்காணித்து 10 இந்திய மொழிகளில் அது குறித்த ஒரு முக்கிய அறிக்கையினை உருவாக்கக் கூடிய நாடி தரங்கிணி எனப்படுகின்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நாடித்துடிப்பு கண்டறியும் கருவியை உருவாக்கி உள்ளது.
PMMSY என்ற முன்னெடுப்பின் கீழ், சிக்கிம் மாநிலத்தின் சோரெங் மாவட்டத்தில் இந்தியாவின் முதல் கரிம மீன்வளத் தொகுப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
BRICS நாடுகளின் தற்போதைய தலைமை பொறுப்பினை வகிக்கும் நாடான பிரேசில், இந்தோனேசிய நாடானது இந்தக் கூட்டமைப்பின் முழு உறுப்பினராக இணைந்து உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கல்வி பயில விரும்பும் சர்வதேச மாணாக்கர்களுக்காக வேண்டி இந்திய அரசானது 'இணையவழி-மாணாக்கர் நுழைவு இசைவுச் சீட்டு' மற்றும் ‘இணையவழி-மாணாக்கர்-X நுழைவு இசைவுச் சீட்டு’ ஆகிய இரண்டு சிறப்பு வகை நுழைவு இசைவுச் சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
'இணையவழி-மாணாக்கர் நுழைவு இசைவுச் சீட்டு என்பது இந்தியாவில் தங்கள் கல்வியைத் தொடர விரும்புபவர்களுக்கானது என்பதோடு மட்டுமல்லாமல் இணைய வழி - மாணாக்கர் -X நுழைவு இசைவுச் சீட்டு என்பது இணைய வழியில் மாணாக்கர் நுழைவு இசைவுச் சீட்டு வைத்திருப்பவர்களைச் சார்ந்தவர்களுக்கு ஆனது.