TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 11 , 2025 11 days 53 0
  • விபத்துகளைத் தடுப்பதற்காக வேண்டி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட சுமார் 13 இடங்களில் எஃகினால் ஆன தடுப்புகளை நிறுவும் பணியை இந்தியத் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது.
  • டிட்டகர்ஹ் இரயில் சிஸ்டம்ஸ் நிறுவனமானது, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதன் முதல் ஓட்டுநர் இல்லாத இரயில்களை பெங்களூரு மெட்ரோ இரயில் கழகத்தின் (BMRCL) மஞ்சள் வழித்தடத்தில் இயக்குவதற்காக ஒப்படைத்துள்ளன.
  • கடலோரக் காவல் படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப் பட்ட 'அமுல்யா' மற்றும் 'அக்சய்' எனப்படும் இரண்டு விரைவு ரோந்துக் கப்பல்களின் (FPV) செயல்பாடுகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
  • புது தில்லியில் இராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தினை நிறுவுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் கம்பி வடந் தாங்கி இரயில் பாலமான அஞ்சி காட் பாலத்தில், இந்திய இரயில்வே நிர்வாகமானது பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு (டவர் வேகன்) வாகனத்தின் சோதனை ஓட்டத்தினை வெற்றிகரமாக நடத்தியது.
  • இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தங்கள் முதன்முதலான பாதுகாப்புப் பேச்சுவார்த்தையினை புது டெல்லியில் மேற்கொண்ட நிலையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மலேசியாவின் ராஜ நுஷிர்வான் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்