பொதுமக்கள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களின் விவரங்களை கைபேசி மூலம் அறிந்து கொள்வதற்காக "Tamilnilam Geo-Info App" என்ற செயலியைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில அரசானது, சுய உதவிக் குழுப் பெண்களை நாடு முழுவதும் உள்ள ஒரு ஆலோசனை வழங்கீட்டாளர்கள், சக சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை வாங்கும் பிரிவினருடன் மிக நன்கு இணைப்பதன் மூலம் முன்னேற்ற நோக்கமுள்ளப் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காகவும், அவர்கள் எளிதில் அணுகும் வகையிலுமான மின்மதி 2.0 செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், சுமார் 70 ஆண்டுகளாக TVS குழுமத்தில் ஓர் முக்கிய நபருமான H. லட்சுமணன் (92) காலமானார்.
ஜம்மு காஷ்மீரில் 13.14 கி.மீ. நீளமுள்ள Z மோர்ஹ் சுரங்கப் பாதையினைப் பிரதமர் ஆவார்கள் திறந்து வைக்க உள்ளார்.
மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஆனது, 22 பட்டியலிடப்பட்ட மொழிகளின் செயல்பாட்டு ஆதரவுடன் கூடிய பன்மொழி e-Shram தளத்தின் செயல்பாட்டினைத் தொடங்கியுள்ளது.
காடி (Gaddi) நாய் இனமானது, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நான்காவது பூர்வீக /நாட்டு நாய் இனமாகவும், இமயமலைப் பகுதியினைச் சேர்ந்த முதல் இனமாகவும் மாறியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக (NRI) என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன சுற்றுலா இரயிலான பிரவாசி பாரதிய விரைவு இரயிலினைப் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி B.N.ஸ்ரீகிருஷ்ணா, அடையாள அட்டை சரி பார்ப்பு மற்றும் தரவுப் பகிர்வுத் தளமான ஈக்வல் நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை தாங்க உள்ளார்.