அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் நாட்டுப்புற கலைகளைக் கற்பிப்பதற்காக வேண்டி 10 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்ச் சங்கங்களுடன் (சங்கங்கள்) இணைந்து பெரும் பணியாற்றுவதற்காக வேண்டி 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஹோலோங்காபர் கிப்பன் வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் தாங்கு மண்டலத்தில் (ESZ) எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விற்காக துளையிடுதலுக்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) நிலைக்குழு அங்கீகரித்து உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மத்தியச் சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CIMFR) ஆனது, இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, நிலச் சமன் எந்திரம் சார்ந்த (டோசர் புஷ்) சுரங்க முறைக்கான முதல் அகழ்வு சோதனையினை சத்தீஸ்கர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்திய நாடானது, உலகளவில் 10,000 முழு அளவிலான மரபணு மாதிரிகளை அணுகக் கூடிய வசதியினை வழங்கும் வகையிலான தனது சொந்த மரபணு தரவு தொகுப்பு மற்றும் இந்திய உயிரியல் தரவு மைய (IBDC) இணைய தளங்களை அறிமுகப் படுத்த செய்ததன் மூலம் மரபியலில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
SS இன்னோவேஷன்ஸ் நிறுவனமானது, அடுத்த தலைமுறை நுட்பத்திலான மிகவும் மேம்பட்ட SSI Mantra 3 எனும் இயந்திர அறுவைசிகிச்சை கருவியை அறிமுகப் படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசானது, 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்காக என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட அகில இந்திய வானொலி கும்பவாணியின் (103.5 MHz) சிறப்பு FM அலைவரிசையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கப்பாட் கடற்கரை மற்றும் கண்ணூரில் உள்ள சால் கடற்கரை ஆகியவை டென்மார்க் நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையிலிருந்து (FEE) மதிப்பு மிக்க நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன.