தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் (AB-NHPM: Ayushman Bharat– National Health Protection Mission) -ஐ செயல்படுத்தும் தேசிய சுகாதார நிறுவனமானது (NHA – National Health Agency) பயனாளர்கள் தங்கள் பதிவுகளை சோதித்துக் கொள்ள வலைதளமொன்றையும் உதவி எண்ணையும் தொடங்கியுள்ளது.
இதற்கான இணையதளம் ‘mera.pmjay.gov.in’ மற்றும் உதவி எண் 14555 ஆகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்திப் பத்திரிக்கையான ‘வாணி’யானது ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார் விருதைப் வென்றுள்ளது. இவ்விருதானது துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டது.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL – National Insurance Company Limited) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தஜிந்தர் முகர்ஜி பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னர் இவர் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் மூத்த எழுத்துறு அலுவலராகவும் அமர்த்தப்பட்டிருந்தார்.
இந்தி திரைப்பட நடிகர்களான வருண் தவான் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரதம மந்திரி தலைமையிலான திறன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வலியுறுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அரசானது உத்தரகாண்ட் தொழிலாளர் மேம்பாட்டு திட்டத்திற்காக (UKWDP - Uttarakhand Workforce Development Project) உலக வங்கியுடன் 74 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது.