TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 20 , 2025 2 days 56 0
  • தொழில்துறை அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு மாநிலத்தின் பிரதிநிதிகள் குழுவானது, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது.
  • திரிபுராவில் உள்ள ட்விப்ரா மாணவர் கூட்டமைப்பு (TSF) ஆனது, கோக்போரோக் என்ற மொழிக்கு ரோமானிய எழுத்து வடிவங்களை ஏற்கக் கோரி போராட்டத்தை நடத்தி ள்ளது.
  • இந்தியாவின் முன்னணி வாகன கண்காட்சி நிகழ்வான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஆனது புது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
  • மத்திய அரசானது, சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ஷிகாரி தேவி வனவிலங்குச் சரணாலயத்தைச் சுற்றி சுற்றுச்சூழல் தாங்குதிறன் மண்டலங்களை (ESZ) நிறுவியுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் M. ராஜேஷ்வர் ராவ், முன்னதாக டாக்டர் பத்ராவால் தலைமை தாங்கிய பணவியல் கொள்கைத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்