2025 ஆம் ஆண்டில் சுற்றுலா மேற்கொள்ள மிகவும் உகந்த நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் 52 இடங்களின் பட்டியலில் அசாம் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் உயிரிச் சிதைவுறுதல் சிப்பமிடல் மையம் ஆனது, கழிவுகளற்ற உயிரி நெகிழியினை உருவாக்குவதற்காக ஒரு மையத்தினை நிறுவி வருகிறது.
இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) பேராசிரியர் உர்பாசி சின்ஹாவிற்கு, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் 2025 ஆம் ஆண்டு கேட்ஸ்-கேம்பிரிட்ஜ் தாக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2025 ஆம் ஆண்டினை சர்வதேச பனிப்பாறைகள் பெரும் பாதுகாப்பு ஆண்டாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் மார்ச் 21 ஆம் தேதியினை இனிமேல் ஆண்டுதோறும் உலகப் பனிப்பாறைகள் தினமாகவும் கொண்டாட உள்ளது.