பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக என்று தாக்கல் செய்த வேட்புமனுவினை அவர் இயல்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர் அல்ல என்று கூறி தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த G. விபூஷா, உத்தரக்காண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற கேடட் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார்.
கர்நாடக கிரிக்கெட் அணியானது, குஜராத் மாநிலதின் வடோதராவின் கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விதர்பா அணியினைத் தோற்கடித்து 2024-25 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையினை வென்றுள்ளது.
மூத்த இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி சஞ்சீவ் ரஞ்சன், இந்தியப் பெருங்கடலின் விளிம்போர நாடுகள் சங்கத்தின் (IORA) அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.