மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளானது, வைகை நதியைப் புணரமைப்பதற்காக காலக் கெடுவுடன் கூடிய ஒரு செயல் திட்டத்தினை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஏலகிரி-சுவாமிமலை, சென்னை நகருக்கு அருகிலுள்ள குடியம் குகைகள், பரலியார், குற்றாலம்-செண்பகதேவி நீர்வீழ்ச்சி மற்றும் நாகலூர்-சன்னியாசிமலை மலைச் சிகரம் ஆகியவற்றில் உள்ள மலையேற்றப் பாதைகள் தமிழ்நாட்டில் மலையேற்றம் செய்பவர்களிடையே முக்கியமான இடங்களாக உருவெடுத்துள்ளன.
மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் ஆனது, மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் என்னுமிடத்தில், "வடகிழக்கு இந்தியாவில் கால்நடைத் துறையின் முழுமையான மேம்பாட்டிற்கான பேச்சுவார்த்தை" என்ற கருத்துருவின் கீழ் ஒரு மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
பழங்குடியின விவகார அமைச்சகம் (MoTA) ஆனது, பழங்குடியினச் சமூகங்கள் எதிர் கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த சவால்களை நிவர்த்தி செய்வதற்காக என்று புது டெல்லியில் தேசியப் பழங்குடியின சுகாதார மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் பழவேற்காடு ஏரி மற்றும் நெலபட்டு பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் மூன்று நாட்கள் அளவிலான ஃபிளமிங்கோ திருவிழா நடத்தப் பட்டது.
உத்தரகாண்ட் மாநில அரசு, பொது உரிமையியல் சட்ட (UCC) விதிகளை அங்கீகரித்து, ஜனவரி மாத இறுதிக்குள் அரசாங்கம் சட்டம் இயற்றலுக்கான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ராஜ மகேந்திரவரம் என்ற இடத்தில் உள்ள மத்தியப் புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் (CTRI) ஆனது, அதிகாரப்பூர்வமாக வணிக வேளாண்மைக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRCA) என மறுபெயரிடப் பட்டு உள்ளது.