TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2018 2130 days 634 0
  • தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் (AB-NHPM: Ayushman Bharat– National Health Protection Mission) -ஐ செயல்படுத்தும் தேசிய சுகாதார நிறுவனமானது (NHA – National Health Agency) பயனாளர்கள் தங்கள் பதிவுகளை சோதித்துக் கொள்ள வலைதளமொன்றையும் உதவி எண்ணையும் தொடங்கியுள்ளது.
    • இதற்கான இணையதளம் ‘mera.pmjay.gov.in’ மற்றும் உதவி எண் 14555 ஆகும்.
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்திப் பத்திரிக்கையான ‘வாணி’யானது ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார் விருதைப் வென்றுள்ளது. இவ்விருதானது துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டது.
  • நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL – National Insurance Company Limited) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தஜிந்தர் முகர்ஜி பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னர் இவர் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் மூத்த எழுத்துறு அலுவலராகவும் அமர்த்தப்பட்டிருந்தார்.
  • இந்தி திரைப்பட நடிகர்களான வருண் தவான் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரதம மந்திரி தலைமையிலான திறன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வலியுறுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்திய அரசானது உத்தரகாண்ட் தொழிலாளர் மேம்பாட்டு திட்டத்திற்காக (UKWDP - Uttarakhand Workforce Development Project) உலக வங்கியுடன் 74 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்