ஒரு உயர்ந்த நோக்குடைய, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, இந்தியாவின் நோக்கங்களும் ஒருங்கமைந்த இந்தியாவின் ஐந்து ஆண்டுகால கூட்டுப் பங்காண்மை வரைவுக்கு உலக வங்கி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த செயல்திட்டமானது 25 முதல் 30 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை இந்தியாவிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை உலக தலைமையக கட்டிடத்தின் மேற்கூரையில் சூரிய ஒளித் தகடுகளை நிறுவுவதற்காக இந்தியா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
நைஜரின் நியாமேயில் இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் மகாத்மா காந்தி சர்வதேச மாநாட்டு மையத்தை (MGICC - Mahatma Gandhi International Convention Centre) செயல்படுத்த இந்தியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகமானது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முயற்சியில் நிதி நிலை அறிக்கை, செலவு மற்றும் கட்டண தொகை செலுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ‘பட்ஜெட் டேஷ்போர்டு’ என்ற உட்புற உபயோக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.