1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 'வன்னியர்' இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் நிகழ்த்தப் பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 "சமூக நீதி ஆர்வலர்கள்" நினைவாக தமிழக முதல்வர் விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மணி மண்டபத்தினை (நினைவுச் சின்னம்) திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர்கள் C.N. அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோர் தலைமையிலான அமைச்சரவைகளில் பணியாற்றிய கோவிந்தசாமி அவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி எனுமிடத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
ePlane என்ற நிறுவனம், e200X எனப்படுகின்ற அதன் eVTOL விமானத்திற்கான வகை சார் சான்றிதழுக்குப் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (DGCA) முறையான ஒப்புதலைப் பெற்ற முதல் தனியார் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
திப்ருகர் நகரானது, அசாம் மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் M.K.ஜெயின் தலைமையில் பொது வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளுக்கான (SFBs) விண்ணப்பங்களை நல் மதிப்பீடு செய்வதற்காக வேண்டி 5 உறுப்பினர்களைக் கொண்ட புதிய வெளிப்புற ஆலோசனைக் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று, உலக சுகாதார அமைப்பினால் மலேரியா பாதிப்பு இல்லாத நாடாகச் சான்றளிக்கப்பட்ட 45வது நாடாக ஜார்ஜியா மாறியுள்ளது.