நாட்டிலேயே முதல் முறையாக, ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, சுமார் 161 வகையான குடிமைச் சேவைகளை வழங்கக் கூடிய 'மன மித்ரா' என்ற பெயரில் அமைந்த வாட்ஸ்அப் ஆளுகை விவகாரங்கள் சார்ந்த ஒரு வசதியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
மத்திய அரசானது, மேற்கு காசி மலைக் குன்றுகள் மற்றும் கிழக்கு ஜெயின்சியா ஹில்ஸ் மாவட்டங்கள் ஆகிய மேகாலயா மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் அறிவியல் பூர்வமான நிலக்கரிச் சுரங்கத்தைத் தொடங்குவதற்காக என்று மூன்று உள்ளூர் சுரங்கத் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
இரயில்வே அமைச்சகம் ஆனது, பயணச் சீட்டு முன்பதிவு, இரயில்களில் உணவு வாங்குவதற்கானச் சேவைகள் மற்றும் PNR விசாரணைகள் போன்றப் பொதுச் சேவைகளை வழங்குவதற்கான ஒற்றைத் தீர்வு மையமாக SwaRail என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு என்ற மாவட்டத்தின் அரக்குப் பள்ளத்தாக்குப் பகுதியில் மூன்று நாட்கள் அளவிலான 'சாலி' எனப்படும் அரக்கு உத்சவ் நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் என்ற நகரில் நடைபெறும் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஒடிசா வாரியர்ஸ் அணியானது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் மகளிர் ஹாக்கி அணியாக மாறியுள்ளது.
சில நீர்வழிகளுக்கு அருகில் வாழும் மக்களை அதிகளவில் பாதித்த ஆற்றுக்குருடு நோயினை முற்றிலுமாக ஒழித்த முதல் ஆப்பிரிக்க நாடாக நைஜர் மாறியுள்ளது.
முதலாவது ரைசினா மத்தியக் கிழக்கு மாநாடு ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரானவர் 2025 ஆம் ஆண்டினைச் சமூக ஆண்டாக அறிவித்து, சமூகம் முழுவதும் ஒற்றுமையையும் உள்ளடக்கத்தையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
தடகளத்தில் (1956) ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அதிக வயதான அமெரிக்க நீளம் தாண்டுதல் வீரர் கிரெக் பெல் சமீபத்தில் காலமானார்.