நெதர்லாந்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் R. பிரக்ஞானந்தா உலக சாம்பியனான D. குகேஷைத் தோற்கடித்து பட்டத்தினை வென்றார்.
அவாடா குழுமம் ஆனது, ஒடிசாவின் கோபால்பூரில் ஒரு நாளைக்கு 1,500 டன் உற்பத்தி திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரியப் பசுமை நுட்பம் சார்ந்த அம்மோனியா உற்பத்தி ஆலையினை உருவாக்க உள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமானது ஆளில்லா விமானங்கள் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்தியாவின் முதல் 'ஆளில்லா விமான நகரினை’ நிறுவுவதற்காக சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ஒரு புதிய தலைமுறை நுட்பத்திலான நிதித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பினை 74 சதவீதத்திலிருந்து 100% ஆக உயர்த்துவதற்கு 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் இந்தியாவின் முதல் வெள்ளைப் புலிகளின் ஒரு இனப்பெருக்க மையத்தினை நிறுவுவதற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (CZA) அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு மகாராஜா ஹரி சிங் விருது வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தச் செய்தல் / குழந்தைகளின் பாலியல் ரீதியிலான படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் சில செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு எதிராக கடும் சட்டங்களை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு மாற உள்ளது.
இந்தியா-மாலத்தீவுகள் ஆகியவற்றுக்கு இடையிலான 'ஈகுவெரின்' எனப்படும் 13வது கூட்டு இராணுவப் பயிற்சியானது மாலத்தீவில் நடத்தப்படுகிறது.
ஒரு சமூக ஊடகத் தளமான எக்ஸ் (X) நிறுவனம் விசா என்ற பண வழங்கீட்டு அட்டை நிறுவனத்துடன் இணைந்து X money என்ற எண்ணிம பணக்கோப்பு மற்றும் நிகரிணை / சக கட்டணச் சேவைகளை அறிமுகப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.