கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் ஆனது, MSCI (Morgan Stanley Capital International) இந்தியக் குறியீட்டைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கோடக் MSCI இந்தியா ETF எனப்படுகின்ற நாட்டின் முதல் பரிமாற்ற-வர்த்தக நிதியினை (ETF) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள பாதுகாப்புசார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொழில்துறை-கல்வித்துறை சார் சிறப்பு மையம் (DIA-CoE) ஆனது முப்பரிமாண அச்சிடல் முறையிலான பெரிய மாதிரிகளின் உற்பத்தி (LAAM) அமைப்பின் பயன்பாட்டுச் செயல்விளக்கத்தினை மேற்கொண்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் ஊரக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (IRMA) இந்தியாவின் முதல் தேசியக் கூட்டுறவுப் பல்கலைக்கழகமான திரிபுவன் சஹ்காரி பல்கலைக் கழகம் ஆனது நிறுவப்பட உள்ளது.
இணையவழி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் (GIG) ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) திட்டத்தின் கீழ் சுகாதார நல வசதிகளைப் பெற தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 3,000 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) சரக்குகளை ரயில் மூலம் கொண்டு செல்வதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள இந்தியத் தேசியப் பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) ஆனது நிறுவனப் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதைப் பெற்றுள்ளது.