TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 8 , 2025 15 days 79 0
  • துறையூரில் உள்ள உலகளாவிய இயற்கை அறக்கட்டளையானது, தமிழ்நாடு பருவ நிலை உச்சி மாநாடு 3.0 நிகழ்வில் ‘சுற்றுச்சூழல் சுடரொளி’ விருதினை (இரண்டாம் பரிசு, அமைப்பு பிரிவு) பெற்றுள்ளது.
  • சென்னையைத் தலைமையகமாக கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆனது, கார்பன் கணக்கீட்டு நிதியியல் மீதான கூட்டாண்மையில் (PCAF) கையொப்பதாரராக மாறியுள்ளது.
  • இந்தூருக்கு அடுத்தபடியாக, போபால் மாவட்ட நிர்வாகம் ஆனது மத்தியப் பிரதேச தலைநகரில் பிச்சை  எடுத்தல், பிச்சை இடுதல் மற்றும் பிச்சைத் தொழில் செய்யும் நபர்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் வாங்குவதற்குத் தடை விதித்துள்ளது.
  • உள்நாட்டில் விற்கப் படும் மொத்த கைபேசிகளில் 99.2% உற்பத்தி செய்யும் உலகின் இரண்டாவது பெரிய கைபேசி உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தெற்கு அரைக்கோளத்தின் மிகப் பெரிய இந்து கோயில் மற்றும் கலாச்சார வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
  • மறைந்த சாமன் அரோரா, டோக்ரி மொழியில் எழுதப்பட்ட ‘இக் ஹோர் அஸ்வதாமா’ என்ற அவரது புத்தகத்திற்காக 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • துபாய் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதலாவது உலகளாவிய நீதி, அன்பு மற்றும் அமைதி உச்சி மாநாட்டினை நடத்த உள்ளது.
  • ஜவுளி அமைச்சகம் ஆனது, 'தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளித் துறையில் ஈடுபாடு மிக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மானியம் (GREAT)' திட்டத்தின் கீழ் தோராயமாக 50 லட்சம் ரூபாய் மானியத்துடன் 04 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலமானது கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்தச் செய்வதற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகத்தினை நிறுவ உள்ளது.
  • புது டெல்லி ஆனது சமீபத்தில் 15வது சர்வதேச உலக மருந்தியல் மீதான விதிமுறை தொகுப்புகள் கூட்டத்தினை நடத்தியது.
    • மருந்தியல் விதிமுறைத் தொகுப்புகள் என்பது ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான தரநிலைகள் மற்றும் தர விவரக்குறிப்புகளின் சட்டப்பூர்வத் தொகுப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்