TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2025 10 days 80 0
  • வருண் சக்ரவர்த்தி, ஃபரோக் இன்ஜினியருக்கு (36 வயது, 138 நாட்கள்) அடுத்தபடியாக, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இந்தியாவின் இரண்டாவது வயதான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • மணிப்பூர் மாநிலத்தில் இன வன்முறை வெடித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தின் முதல்வர் N. பிரேன் சிங் இராஜினாமா செய்துள்ளார்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐந்து நாட்கள் அளவிலான 16வது ஏரோ இந்தியா 2025 கண்காட்சியானது பெங்களூருவில் உள்ள ஏலஹங்கா இந்திய விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
  • இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையிலான சைக்லோன் 2025 எனப்படுகின்ற மூன்றாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது ராஜஸ்தானில் தொடங்கியது.
  • மனுஷ் ஷா மற்றும் தியா சிட்டாலே ஆகியோர் முறையே 2025 ஆம் ஆண்டு தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டங்களை வென்றனர்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவினை "அமெரிக்க வளைகுடா" என்று அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளதோடு, பிப்ரவரி 09 ஆம் தேதியினை "அமெரிக்க வளைகுடா தினம்" என்றும் அறிவித்துள்ளார்.
  • OpenAI நிறுவனத்தின் ChatGPT Gov என்பது அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு OpenAI நிறுவனத்தின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அணுகுவதற்கான சில கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ChatGPT வசதியின் புதிய வடிவமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்