TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 13 , 2025 9 days 69 0
  • இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP) ஆனது, சத்தீஸ்கரின் அபுஜ்மத் என்ற பகுதியில் அமைந்துள்ள குதுல் எனுமிடத்தில் அதன் புதிய முதன்மைச் செயல்பாட்டுத் தளத்தினை (COB) நிறுவியுள்ளது.
  • சர்வதேசப் பௌத்த/புத்தக் கூட்டமைப்பு (IBC) ஆனது இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையின் ஆயுதப் படைகளை ஒன்றிணைக்கும் வகையிலான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பான மூன்று நாடுகளின் முப்படை பயணத்தைத் தொடங்க உள்ளது.
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC) முதல் இளையோர் உச்சி மாநாடு 2025 ஆனது குஜராத்தின் காந்திநகரில் "Youth as a Bridge for Intra-BIMSTEC Exchange" என்ற கருத்துருவில் நடைபெற்றது.
  • INS சுஜாதா, INS ஷார்துல் மற்றும் ICGS வீரா ஆகியவற்றைக் கொண்ட இந்தியக் கடற் படையின் முதல் பயிற்சிப் படை (1TS) ஆனது, ஒரு தொடர் கூட்டுப் பயிற்சி மீதான நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்திற்குச் சென்றுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் களங்களில் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள .bank.in என்ற புதியதொரு வலைதளத்தினை அறிமுகப்படுத்த உள்ளது.
  • பிரான்சு நாட்டின் டென்னிஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் 2025 ஆம் ஆண்டு சென்னை ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்று தனது முதல் ATP பட்டத்தைக் கைப்பற்றினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்