இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP) ஆனது, சத்தீஸ்கரின் அபுஜ்மத் என்ற பகுதியில் அமைந்துள்ள குதுல் எனுமிடத்தில் அதன் புதிய முதன்மைச் செயல்பாட்டுத் தளத்தினை (COB) நிறுவியுள்ளது.
சர்வதேசப் பௌத்த/புத்தக் கூட்டமைப்பு (IBC) ஆனது இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையின் ஆயுதப் படைகளை ஒன்றிணைக்கும் வகையிலான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பான மூன்று நாடுகளின் முப்படை பயணத்தைத் தொடங்க உள்ளது.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC) முதல் இளையோர் உச்சி மாநாடு 2025 ஆனது குஜராத்தின் காந்திநகரில் "Youth as a Bridge for Intra-BIMSTEC Exchange" என்ற கருத்துருவில் நடைபெற்றது.
INS சுஜாதா, INS ஷார்துல் மற்றும் ICGS வீரா ஆகியவற்றைக் கொண்ட இந்தியக் கடற் படையின் முதல் பயிற்சிப் படை (1TS) ஆனது, ஒரு தொடர் கூட்டுப் பயிற்சி மீதான நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்திற்குச் சென்றுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் களங்களில் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள .bank.in என்ற புதியதொரு வலைதளத்தினை அறிமுகப்படுத்த உள்ளது.
பிரான்சு நாட்டின் டென்னிஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் 2025 ஆம் ஆண்டு சென்னை ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்று தனது முதல் ATP பட்டத்தைக் கைப்பற்றினார்.