TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 15 , 2025 7 days 68 0
  • தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் சென்னைக் கோட்டத்திற்கான குளிர் சாதன வசதிகள் கொண்ட இரயில் பெட்டிகளை ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற் சாலை (ICF) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக வேண்டி வான்வழி நடவடிக்கைகளில் நன்கு கவனம் செலுத்தும் விதமாக, இந்திய இராணுவமும் இந்திய விமானப் படையும் இணைந்து கிழக்குப் படைத் தளத்தில் 'விங்கட் ரைடர்' பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டன.
  • "ஸ்ரஜனம்" என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட தானியங்கி உயிரி மருத்துவக் கழிவுச் சுத்திகரிப்பு நிலையம் ஆனது புது டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவுடனான ஒத்துழைப்பைப் பெருக்குவதற்காக ஐக்கியப் பேரரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் "Defence Partnership–India" அல்லது DP-I எனப்படும் ஒரு பிரத்தியேக பிரிவானது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதாக ஐக்கியப் பேரரசு அறிவித்து உள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்வெளிப் பயன்பாடுத் தரத்திலான SHAKTI அமைப்பு அடிப்படையிலான குறைகடத்தி சில்லினை உருவாக்கி உள்ளன.
  • இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் யஷ்வந்த் கிளப் போட்டிகளில் 36வது தேசியப் பட்டத்தையும் 10வது ஆடவர் ஸ்னூக்கர் பட்டத்தினையும் வென்றுள்ளார்.
  • துபாயில் சமீபத்தில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டின் (WGS) போது, ​​2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த M-Gov விருது விழாவில் புது டெல்லியைச் சேர்ந்த மூன்று இந்தியக் கணினி அறிவியல் மாணவர்கள் அதன் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoHUA) ஆனது, உணவு, பாரம்பரியக் கலைகள் மற்றும் புகைப்படக் கலை மூலம் இந்தியாவின் கலாச்சாரச் செழுமையை எடுத்துக்காட்டும் வகையில், 'Culinary, Crafts & Clicks – Moods & Magic - சமையல், கைவினைப் பொருட்கள் மற்றும் புகைப்படத் துணுக்குகள் – மன நிலைகள் & மாயம்' என்ற தலைப்பிலான விழாவினை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்