TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 17 , 2025 5 days 94 0
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரில் வளையல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சங்கு ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • கோவில் அறங்காவலர்களை நியமிப்பதற்காக சாதியினை ஒரு பெரும் மதிப்புருவாக கருதாமல் மாறாக மத நம்பிக்கை, கடவுள் மீதான ஆழ்ந்த பக்தி மற்றும் நல்லொழுக்க நடத்தை ஆகியவற்றை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனம் (IIAS) மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறை (DARPG) ஆகியவை இணைந்து 2025 ஆம் ஆண்டு IIAS-DARPG இந்தியா மாநாட்டினை வெற்றிகரமாக நாடத்தியுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டின் யுனானி தினத்தின் ஒரு பகுதியாக "ஒருங்கிணைந்தச் சுகாதாரத் தீர்வுகளுக்காக என்று யுனானி மருத்துவத்தில் புதுமைகள் – எதிர்கால வழிகள்" என்ற சர்வதேச மாநாடு ஆனது புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் ஆனது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்காக என 286 விண்ணப்பங்களில் இருந்து சுமார் 26 முதன்மை வேளாண் கடன் சங்கங்களை (PACS) தேர்ந்தெடுத்துள்ளன.
  • இந்திய ரிசர்வ் வங்கி, அதன் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.
  • ஆசியாவின் முதல் மிகவும் தத்ரூபமான இயற்கை வடிவிலான மின்னனுத் தொலைக் கட்டுப்பாட்டு வடிவிலான எல்லி எனும் யானையானது, பெங்களூருவின் செயிண்ட் ஜோசப் பள்ளியில் அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இது விலங்குகள் நலன் குறித்த செய்தியை வழங்குவதோடு மாணவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
  • பாரிசு நகரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மீதான செயல் உச்சி மாநாட்டில் நடைபெற்ற முக்கிய விவாதங்களைத் தொடர்ந்து, அடுத்த உலகளாவியச் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டினை இந்தியா நடத்தும் என்று இந்தியப் பிரதமர் அறிவித்து உள்ளார்.
  • ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் P. ஹிந்துஜா தொகுத்த "I Am?" என்ற புத்தகத்தினை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்