TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2025 5 days 54 0
  • இந்தியாவானது, சிங்கப்பூர் மற்றும் ஓமன் போன்ற அதன் இந்தியப் பெருங்கடல் பங்கு தாரர் நாடுகளுடன் இணைந்து ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டினை (IOC) நடத்துகின்றது.
  • அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், யுனெஸ்கோ அமைப்பானது, "Imagine a world with more women in science" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • மத்தியப் பிரதேச அரசானது, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் மத்தியப் பிரதேசத்தினை எண்ணிம மற்றும் தொழில்நுட்ப மையமாக நிறுவுவதற்குமான ஒரு உலகளாவிய திறன் மையக் கொள்கை 2025 என்ற கொள்கையினை வெளியிட்டுள்ளது.
  • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஆனது, கைபேசிகளின் இயங்கு தள (OS) அடிப்படையில் நுகர்வோரிடமிருந்து வெவ்வேறு கட்டணங்களை வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில் அது ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது, செயலற்ற அல்லது உரிமை கோரப்படாத பரஸ்பர நிதியக் குறியீடுகளைக் கண்காணிப்பதற்கும், அவற்றை மீட்டு எடுப்பதற்கும் என முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக வேண்டி MITRA எனும் புதிய எண்ணிமத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மீன் வளத் துறை அமைச்சகமானது PMMKSSY (Pradhan Mantri Matsya Kisan Samridhi Sah-Yojana) என்ற ஒரு திட்டத்தின் கீழ் ஏராளமான பலன்களைப் பெறத் தகுதியுள்ள பங்கு தாரர்களை ஊக்குவிப்பதற்காக என்று, தேசிய மீன்வள எண்ணிமத் தளத்தில் (NFDP) பதிவு செய்வதற்கான தேசிய அளவிலான சிறப்புப் பிரச்சாரத்தினை ஏற்பாடு செய்து வருகிறது.
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையானது, 16 துறைகள்/அமைச்சகங்களில் 120 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நீண்டகால ஓய்வூதிய வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக 12வது நாடு தழுவிய ஓய்வூதிய மன்றத்தினை நடத்தியது.
  • தேசிய அனல் மின் கழக நிறுவனமானது (NTPC), இடர்களை எதிர்கொள்வதற்கான நீர் வளத்தின் நெகிழ்திறன் பிரிவில் மிக மதிப்புமிக்க 2025 ஆம் ஆண்டிற்கான நிலைத் தன்மையை நோக்கிய விரைவான முன்னேற்றத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், பெங்களுருவில் The Art of Living அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேசப் பெண்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்