இந்தோனேசியக் கடற்படை நடத்தும் கொமோடோ எனப்படும் ஐந்தாவது பலதரப்பு கடற்படைப் பயிற்சியில் ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கப்பல்கள் பங்கேற்கின்றன.
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஆறாவது தர்மா கார்டியன் பயிற்சியினை ஜப்பானின் மவுண்ட் ஃபுஜியில் நடத்த உள்ளது.
பாரத் டெக்ஸ் 2025 எனப்படுகின்ற இரண்டாவது ஜவுளி வர்த்தகக் கண்காட்சி மற்றும் அறிவுப் பகிர்வு நிகழ்வுகள் ஆனது புது டெல்லி மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.
ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் ஆனது, 2025 ஆம் ஆண்டு பாரத் டெக்ஸ் நிகழ்ச்சியில் "Breathing Threads" என்ற தலைப்பிலான ஒரு ஆடை வடிவமைப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பின் (TRIFED) முதன்மை முயற்சியான ஆதி மஹோத்சவ்-2025 ஆனது புது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
உகாண்டாவைச் சேர்ந்த ஜேக்கப் கிப்லிமோ பார்சிலோனாவில் நடைபெற்ற 21.0975 கி.மீ. ஓட்டப் பந்தயத்தினை 56 நிமிடங்கள் 42 வினாடிகளில் நிறைவு செய்து உலக அரை மராத்தான் போட்டியின் சாதனையை முறியடித்துள்ளார்.
உலகளாவிய பொது வாக்கெடுப்புக்குப் பிறகு, ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் 2024 ஆம் ஆண்டிற்கான BBC பத்திரிகை சிறந்த இந்திய விளையாட்டுப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய தேசிய இணையப் பரிமாற்ற ஆணையம் (NIXI) ஆனது இந்தியக் குடிமக்கள் இடையே இணைய வழி ஆளுகையில் (IG) விழிப்புணர்வினை உருவாக்குவதற்கும், நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கும் அதன் இணைய ஆளுகைப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது .