TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2025 2 days 26 0
  • தமிழக முதல்வர், திருச்சி மற்றும் மதுரையில் மொத்தம் 717 கோடி ரூபாய் செலவில் TIDEL தொழில்துறைப் பூங்காக்களை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
  • ஐக்கியப் பேரரசு அரசானது, ஐக்கியப் பேரரசு - இந்தியா இடையிலான முக்கிய வணிக உறவுகளுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக வேண்டி டாடா குழுமத் தலைவர் N.சந்திரசேகரனுக்கு கௌரவ வீரத்திருத்தகை (நைட்ஹூட்) விருதை வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் நான்காவது தலைமுறை நுட்பத்திலான ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் ஆன 'மத்ஸ்யா-6000' ஆனது, மனிதப் பாதுகாப்பு, அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் அறிவியல் சாதனங்களின் தாங்கு திறன் சோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஈரப்பத சோதனையை வெற்றிகரமாக நிறவு செய்துள்ளது.
  • கேரள மாநில அரசானது, கடலடி சூழல் சார்ந்த அவசரநிலைகளுக்கு நடவடிக்கையை மேற்கொள்வதற்காகத் தயாராக உள்ள அதிகப் பயிற்சி பெற்ற 17 அதிகாரிகளைக் கொண்ட "கனெட்ஸ்" எனப்படும் இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ஸ்கூபா டைவிங் தீயணைப்பு குழுவினைத் தொடங்கி வரலாறு படைத்துள்ளது.
  • இந்தோனேசிய நாட்டு அணியானது, சீன மக்கள் குடியரசை வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டு பேட்மிண்டன் ஆசியக் கலப்பு அணி சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்றுள்ளது.
  • உலகின் அதிகளவில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா சமீபத்தில் வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்