TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 22 , 2025 10 hrs 0 min 12 0
  • சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த நிலைத்தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவுக்கான கூட்டணியின் கீழ் 37 தொழில்நுட்ப நிறுவனங்கள், 11 நாடுகள் மற்றும் 5 சர்வதேச அமைப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்துள்ளனர்.
  • பிரதமர் புது டெல்லியில் முதலாவது SOUL தலைமைத்துவ மாநாட்டினை தொடங்கி வைத்தார்.
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது, 1938 ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக தினேஷ் காரா தலைமையிலான ஓர் உயர் அதிகாரக் குழுவை அமைத்துள்ளது.
  • கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு 2 நாட்கள் பயணத்தினை மேற்கொண்டார்.
  • மத்திய அரசானது, வங்காளதேசம் மற்றும் பூடான் ஆகிய இரண்டு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்க உள்ள அசாம் மாநிலத்தின் ஜோகிகோபாவில் அமைக்கப் பட்டுள்ள ஒரு உள்நாட்டு நீர்வழி முனையத்தினை (IWT) திறந்து வைத்துள்ளது.
  • இந்தியத் தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆனது, இந்தியாவின் விண்வெளிசார் புத்தொழில் நிறுவனங்களின் ஒரு பெரும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக 500 கோடி ரூபாய் மூலதன நிதியுடன் ஒரு புதிய நிதியைத் தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்