TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 23 , 2025 11 hrs 0 min 5 0
  • மத்திய அரசாங்கமானது, தலைமைப் பொருளாதார ஆலோசகரான  (CEA) V.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலத்தினை 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
  • முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவையானது, புதிய சட்ட மன்றத்தின் முதல் அமர்வில் மத்திய அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை அமல்படுத்துவதற்கும் 14 CAG அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனமானது, போர் விமானங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு (CATS) - Warrior என்ற முழு அளவிலான சோதனை இயந்திர தரை வழி ஓட்டச் சோதனையினை நடத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது.
  • கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை மெத்தனோட்ரோபிக் (சாணவளியுண்ணி) பாக்டீரியாவைப் பயன்படுத்தி தூய்மையான உயிரி எரிபொருளாக மாற்றுவதற்கான மேம்பட்ட உயிரியல் முறையை உருவாக்கியுள்ளனர்.
  • கூகிள் நிறுவனத்தின் டீப் மைண்ட் ஆய்வக நிறுவனமானது, தற்போதுள்ள மிகவும் பெரும்பாலான கருவிகளை விடவும், அதிக நாட்களுக்கு முன்னதாகவும் வானிலையை முன்னறிவிக்கக்கூடிய GenCast எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியினை வெளியிட்டுள்ளது.
  • ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், டை எத்தில் ஹெக்ஸைல் தாலேட் (DEHP) நெகிழியாக்கியினை சிதைப்பதற்காக வேண்டி சல்போபாசிலஸ் அமிலோபிலஸால் எனப்படும் மண் பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப்படும் ஈஸ்டெரேஸ் நொதியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2025 ஆம் ஆண்டின் வரைவு விதிமுறைகள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடு ஆனது, அந்த வரைவை எதிர்க்கின்ற வகையில் தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய சில மாநிலங்களின் பங்களிப்புடன் கேரளாவின் திருவனந்தபுரத்தில்  நடைபெற்றது.
  • மத்திய அரசு ஆனது, புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான தலைமைத் தகவல் அதிகாரி (CIO) மாநாட்டில் எண்ணிம நிறுவன அடையாளக் கையேட்டை (DBIM) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியக் கடற்படையின் INSV தரிணி என்ற கப்பல், நவிகா சாகர் பரிக்ரமா II எனப் படும் உலகளாவியச் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது மற்றும் மிகவும் சவாலான ஒரு  கட்டத்தை முடித்து கனடாவின் போர்ட் ஸ்டான்லியில் நுழைந்துள்ளது.
  • தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கலை எதிர்த்தல் (NMFT) தொடர்பான நான்காவது  மாநாடு ஆனது ஜெர்மனியில் நடைபெற்ற நிலையில் இதில் புது டெல்லியில் நிரந்தர NMFT செயலகத்தினை நிறுவ இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • 28 வது கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில், 543 இனங்களுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்காளம் முன்னிலை வகிக்கிறது.
  • தொழில் துறை வல்லுநர்கள் குழுவால் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவப் பட்ட மங்களூருவில் உள்ள கர்நாடகா வங்கி லிமிடெட் (KBL) நிறுவனமானது, சமீபத்தில் தனது 100 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.
  • புது டெல்லியில் நடைபெற்ற 100வது SKOCH உச்சி மாநாட்டில், நாகாலாந்து மாநில வன மேலாண்மை திட்டத்திற்கு (NFMP) 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க SKOCH விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • அசாம் மாநிலத்தில் பாம்பாக்ஸ் சீபா (சிவப்பு பட்டு பருத்தி மரத்தின்) என்ற மலர்களின் கண்கவர் அழகினை மிக நன்கு கொண்டாடும் விதமாக இரண்டு நாட்கள் அளவிலான 2வது சிமோலு திருவிழா கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்