அரசாங்கத்தின் வடிவமைப்பு சார் உள்கட்டமைப்புகளுக்கான ஊக்கத் தொகை (DLI) என்ற திட்டத்தின் கீழ் WiSig நெட்வொர்க் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 3GPP திட்டத்திற்கான ஒரு இணக்கமான இணைய சேவை இணக்க ஒற்றைச் சில் கட்டகம் (SoC) ஆனது குறிப்பிடத்தக்க நிதி வசதி இருந்த போதிலும் பல உற்பத்திச் சவால்களை எதிர் கொள்கிறது.
டெல்லியின் இந்திரப்பிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, வயது முதிர்வினை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு என ஊக்குவிக்கக் கூடிய கூறுகளை அடையாளம் காண்பதற்காக வேண்டி வடிவமைக்கப் பட்ட AgeXtend என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தினை உருவாக்கியுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஆனது செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி குறித்த உலகளாவிய மாநாட்டை பாரிசு நகரில் நடத்தியது.
பஞ்சாப் தேசிய வங்கி (PNB) ஆனது, Clari5 நிறுவனத்தின் தேசிய இணையவெளிக் குற்ற அறிக்கையிடல் தளமான (NCRP) ஒருங்கிணைப்புத் தீர்வு அமைப்பினை செயல்படுத்திய முதல் இந்திய வங்கியாக மாறியுள்ளது.
நந்திவரத்தில் (செங்கல்பட்டு) உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் ஆனது, தமிழ்நாட்டில் குருதி கூழ்மப் பிரிப்பு (டயாலிசிஸ்) செயல் முறை மையத்தினைத் தொடங்கிய முதல் ஆரம்ப சுகாதார மையமாக மாறியுள்ளது.
கேரள மாநில அரசானது, ரெமிடியோ நிறுவனத்துடன் இணைந்து, நாள்பட்ட கண் நோய்களைப் பரிசோதிப்பதற்கான செயற்கை நுண்ணறிவின் ஒரு உதவியுடன் கூடிய நயனமிர்தம் 2.0 என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 20 வயதான விஸ்வா இராஜகுமார் மெமரி லீக் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மற்றும் செயற்கைக் கால் பொருத்தப்பட்ட மாற்றுத் திறனாளி வீரரான பிரிட்டன் நாட்டின் ஜான் மெக்ஃபால் என்பவர், சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆய்வுக் பணிகளுக்கு அனுப்பப் படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மாற்றுத் திறனாளி விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு சர்வதேச கலைக் கண்காட்சி ஆனது சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு சில்லுத் தயாரிப்பு நிறுவனமான என்விடியா மற்றும் அதன் ஆராய்ச்சி பங்குதாரர் நிறுவனங்கள் ஆகியவை Evo2 எனப்படுகின்ற புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை உருவாக்கியுள்ளன என்பதோடு இது அனைத்து வகையான உயிரினங்களிலும் உள்ள மரபணுக் குறியீட்டை ஆய்வு செய்து வடிவமைக்கும் திறன் கொண்டது.
உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட்ட 'மரபணுப் பதப்படுத்துதல் பூங்கா' என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் 'உயிரி வங்கி' ஆனது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உயிரியல் பூங்கா என்று அழைக்கப் படுகின்ற பத்மஜா நாயுடு இமய மலை விலங்கியல் பூங்காவில் செயல்பட்டு வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்தா தாஸ் பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.