TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2025 4 days 61 0
  • சென்னையின் கோபாலபுரத்தில் அமைக்கப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமியை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
  • புதுமைகளை வளர்ப்பதற்கும், தரவுப் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாக நடைமுறைகளுக்குப் பங்களிப்பதற்கும் இந்தியத் தலைமைக் கணக்காளர் (CAG) மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • "ஒடிசி நடனத்தின் தந்தை" என்று கருதப்படும் ஒரு புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞர் மாயாதர் ரவுத் (92) சமீபத்தில் காலமானார்.
  • ஆண்டுதோறும் நடைபெறும் கஜுராஹோ நடன விழா 2025 ஆனது, மத்தியப் பிரதேச கலாச்சாரத் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆளுகை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் மிக கவனம் செலுத்தும் விதமாக, புது டெல்லியில் உள்ள AIIMS நிறுவனத்தினைச் சீரமைப்பதற்காக V.K. பால் தலைமையில் ஒரு குழுவை நிதி ஆயோக் அமைத்துள்ளது.
  • பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (DGCA) உரிமம் பெற்றதை அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் எட்டாவது விமான நிலையமாக டாடியா அதிகாரப் பூர்வமாக உருவெடுத்துள்ளது.
  • IDEX எனப்படும் 17வது சர்வதேசப் பாதுகாப்புக் கண்காட்சி மற்றும் NAVDEX  எனப்படும் 8வது கடற்படைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக் கண்காட்சி ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்