TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 1 , 2025 3 days 43 0
  • அரக்கோணத்தில் உள்ள மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட் சேர்ப்பு பயிற்சி மையம் (RTC) ஆனது, சோழ இளவரசரின் நினைவாக, இராஜாதித்ய சோழன் (RTC) தக்கோலம் (ராணிப் பேட்டை மாவட்டம்) என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு ஆனது ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் அறிஞருமான R. பாலகிருஷ்ணனை சர்வதேச தமிழ் ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்து உள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 'களங்கரை' எனப்படும் ஒரு விரிவான போதைப்பொருள் அடிமையாதல் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் அந்த மாநிலத்தில் உள்ள CBSE, ICSE, IB மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்டப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
  • பஞ்சாப் அரசு ஆனது, அதன் அனைத்துப் பள்ளிகளிலும், அவற்றின் வாரிய இணைப்பு எதுவாக இருந்தாலும், 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி மீதானப் பாடத்தினை ஒரு முக்கியப் பாடமாக கட்டாயமாக்கியுள்ளது.
  • முதலாவது மகளிர் அமைதி காப்புப் படையினர் மாநாடு ஆனது 'Women in Peacekeeping: A Global South Perspective' என்ற கருத்துருவுடன் புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்திய அரசானது, சமூக நீதிக்கான உலகளாவியக் கூட்டணியின் கீழ் சமூக நீதி குறித்த முதல் பிராந்திய பேச்சுவார்த்தையினை புது டெல்லியில் நடத்தி வருகிறது.
  • கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானின் வீரரை தோற்கடித்து, இந்தியாவின் பங்கஜ் அத்வானி 2025 ஆம் ஆண்டு ஆடவருக்கான ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்றார்.
  • மிக நல்ல ஆரோக்கியத்திற்கு நமது உணவில் புரதத்தினை உள்ளடக்கச் செய்வதன் ஒரு பெரும் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று உலகப் புரத தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்