ஐந்தாவது தமிழ்நாடு காவல் ஆணையமானது, காவல்துறையினரின் பெரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக, குறிப்பாக வாய்மொழி வாயிலான துஷ்பிரயோகம், உண்மையான வழக்குகளைப் பதிவு செய்யாதது, பொய்யான வழக்குகளைப் பதிவு செய்தல், மிகத் தவறான தடுப்புக் காவல்கள் அல்லது கைதுகள், குற்றம் சாட்டப் பட்ட நபர்களை மிருகத்தனமாக நடத்துதல், பாரபட்சமான அல்லது மிகவும் நியாயமற்ற விசாரணை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அமலாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பு (AARDO) ஆனது, புது டெல்லியில் நடைபெற்ற அதன் 21வது பொது மாநாட்டின் பொதுக் கூட்டத்தில், 2025-27 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான ஒரு காலக் கட்டத்திற்காக வேண்டி தலைமை பொறுப்பிற்கு இந்தியாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.