கொல்கத்தா விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக மலிவு விலையில் சிற்றுண்டி உணவுகளை வழங்குவதற்காக சென்னை விமான நிலையத்தில் UDAN யாத்ரி கஃபே எனும் சிற்றுண்டியகமானது திறக்கப்பட்டுள்ளது.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக நிறுவனத்தில் IInvenTiv2025 எனப் படும் இரண்டு நாட்கள் அளவிலான தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி ஆனது நடைபெற்றது.
டாக்டர் S.பாலச்சந்திரனுக்குப் பதிலாக சென்னை வானிலை மையத்தின் புதியத் தலைவராக டாக்டர் B. அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வகையில் சென்னை வானிலை மையமானது முதல்முறையாக ஒரு பெண் தலைமையை ஏற்றுக் கொண்டு இருக்கும்.
கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் என்பவரின் Heart Lamp எனப்படும் கதைத் தொகுப்பு ஆனது, இந்த ஆண்டு சர்வதேசப் புக்கர் பரிசிற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 புத்தகங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.