சென்னை உயர்நீதிமன்றம் ஆனது, வெவ்வேறு சாதிக் குழுக்கள் ஒரு தெய்வத்தை வழிபடுவதில் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றலாம் என்றும், ஆனால் எந்தவொரு சாதிக் குழுவையும் சேர்ந்தவர்கள் ஒரு கோயில் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி, அதனை நிர்வகிக்க அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமையை கோர முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
காஷ்மீர் சமீபத்தில் பல்குன மாதத்தின் தேய்பிறைக் காலத்தின் 13வது நாளில் ஹேரத் விழாவைக் கொண்டாடியது.
எரிசக்தி திறன் வாரியம் (BEE) ஆனது, PRAKRITI 2025 (தகவமைப்பினை உறுதிப்படுத்தல், விழிப்புணர்வு, தகவல் மற்றும் வளங்களை ஊக்குவித்தல்) எனப்படுகின்ற கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாட்டினைப் புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
டென்மார்க் நாடானது, நிலையான எரிசக்தி தீர்வுகள் என்ற தொழில்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு கூட்டு முயற்சிகளை அதிகரிக்கவும், கார்பன் நடுநிலைமையை நோக்கிய அவற்றின் உலகளாவிய கூட்டு இலக்கை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவும் தனது பசுமை எரிபொருள் கூட்டணி இந்தியா (GFAI) முன்னெடுப்பினை அறிவித்துள்ளது.
UPI மற்றும் RuPay கடன் அட்டை கொடுப்பனவு முறைகளை ஏற்றுக் கொள்ளும், சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் Paytm கட்டண அங்கீகார ஒலிப்பு பெட்டிகளை Paytm நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண் தொழில்முனைவோர் சுய உதவிக் குழுக்களுக்கு (SHG) அதிகாரம் அளிக்கவும், அவர்களின் சிறப்பான கைவினைத் திறனை நன்கு வெளிப்படுத்தவும், சரஸ் ஆஜீவிகா மேளா 2025 என்ற நிகழ்வானது உத்தரப் பிரதேசத்தில் நொய்டா நகரில் நடைபெற்றது.
பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவரான பிரீட்ரிக் மெர்ஸ், ஜெர்மனியின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியத்தின் (SEBI) 11வது தலைவராக துஹின் காந்தா பாண்டே பொறுப்பேற்றுள்ளார்.
சைடஸ் லைஃப் சயின்சஸ் என்ற ஒரு நிறுவனமானது, புதிய வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பினை வழங்குவதற்காக என்று வாக்ஸிஃப்ளூ-4 என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனமானது, Ocelot எனப்படும் அதன் முதல் உள் வளாக குவாண்டம் கணினி சில்லுகளின் முன்மாதிரியை வெளியிட்டுள்ளது.
பொதுச் சுகாதார அமைப்பில் முறையான மற்றும் உதாரணமாகக் கொள்ளக்கூடிய நடைமுறைகள் மற்றும் புத்தாக்கங்கள் குறித்த 9வது தேசிய உச்சி மாநாடு ஆனது ஒடிசாவின் பூரி நகரில் நடைபெற்றது.