"10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குதல் மற்றும் அதை ஊக்குவித்தல்" என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பீகாரில் 10,000வது FPO சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தரவுகளின் படி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமானது கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மிகவும் அதிக வெப்பமான ஆண்டாகும்.
ICC தலைவர் ஜெய் ஷாவுக்கு 2025 ஆம் ஆண்டு FILA விழாவில் ஐகான் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
டெசர்ட் ஹண்ட் 2025 எனப்படுகின்ற இந்தியாவின் ஒருங்கிணைந்த முப்படைகளின் ஒரு சிறப்புப் படைப் பயிற்சியானது ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் நடத்தப் பட்டது.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் ஆங்கில மொழியினை அமெரிக்காவின் அதிகாரப் பூர்வ மொழியாக நியமிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளர்கள் மன்றத்தினால் (AISEF) ஏற்பாடு செய்யப் பட்ட 2025 ஆம் ஆண்டு சர்வதேச நறுமணப் பொருட்கள் மீதான மாநாடு (ISC) ஆனது, பெங்களூரில் 'Building the Trust Beyond the Borders: Transparency, Sustainability, Confidence - எல்லைகளுக்கு அப்பால் ஒரு நம்பிக்கையை உருவாக்குதல்: வெளிப்படைத் தன்மை, நிலைத் தன்மை, நம்பிக்கை' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
இரண்டாவது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப சபை (TTC) கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
நோபல் பரிசு பெற்றவரும் ஒரு சமூகச் சீர்திருத்தவாதியுமான கைலாஷ் சத்யார்த்தி 'Diyasalaai' எனப்படும் தனது சுயசரிதையை வெளியிட்டார்.
ஒரு சக்கர நாற்காலி அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தினைக் கொண்டாடச் செய்வதற்கு மார்ச் 01 ஆம் தேதியன்று சர்வதேச சக்கர நாற்காலி தினம் அனுசரிக்கப் படுகிறது.
முதலாம் உலகப் போரில் போராடிய இந்திய வீரர்களின் பெரும் துணிச்சல் மற்றும் தியாகங்களையும், இந்திய ராணுவம் தேசத்திற்கு அளித்த பெரும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் மார்ச் 03 ஆம் தேதியன்று தேசியப் பாதுகாப்பு தினம் ஆனது முதன்முதலில் கொண்டாடப்பட்டது.