TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 6 , 2025 27 days 75 0
  • விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தியாவின் முதல் வரைகதை புத்தக நூலகம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • கிரிக்கெட்டில் நமது நாட்டின் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மகாராஸ்டிராவின் பத்மகர் ஷிவல்கர் காலமானார்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான (PwDs) அணுகல் மற்றும் உள்ளடக்கத்தினை மிக நன்கு ஊக்குவிப்பதற்காக என்று, டேராடூனில் உள்ள தேசிய பார்வைத் திறன் குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரமளிப்பு நிறுவனம் (NIEPVD) ஆனது ‘சுகம்ய யாத்ரா’ (அணுகக் கூடிய வகையிலான பயணம்) எனும் செயலியை வெளியிட்டுள்ளது.
  • உலக வங்கி மற்றும் ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி (AfDB) ஆனது, முக்கியப் பங்குதாரர்களுடன் இணைந்து 2030 ஆம் ஆண்டிற்குள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் 300 மில்லியன் மக்களுக்கு மின்சார வசதி வழங்குவதற்காக திட்டம் 300 எனும் திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
  • சிற்பங்கள் மற்றும் நவீன ஓவியக் கலைக்குப் புகழ் பெற்ற பிரபல இந்தியக் கலைஞரான குஜராத்தின் ஹிம்மத் ஷா காலமானார்.
  • அமைதி, அகிம்சை/வன்முறையற்ற தன்மை மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் உலக அமைதி மையம் ஆனது ஹரியானாவின் குருகிராமில் திறக்கப் பட்டுள்ளது.
  • உலகின் மிக வயதான (98 வயது 63 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ரான் டிராப்பர் தென்னாப்பிரிக்காவில் காலமானார்.
  • விதர்பா அணியானது, 2024-25 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் கேரளா அணியினை வீழ்த்தி, ஏழு போட்டித் தொடர்களில் தனது மூன்றாவது ரஞ்சிக் கோப்பையை வென்றது.
    • இது கேரளா அணியினைப் பொருத்தவரை, அதனுடைய முதல் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியாகும்.
  • அசாம் மாநில அரசானது, சிராங்-ரிப்பு யானைகள் வளங்காப்பகத்தினை அந்த மாநிலத்தின் 8வது தேசியப் பூங்காவாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    • இந்தப் புதியத் தேசியப் பூங்காவானது சிக்னா ஜ்வாலாவ் தேசிய பூங்கா என்று பெயரிடப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்