TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 7 , 2025 26 days 71 0
  • சர்வதேச தற்கொலைத் தடுப்பு சங்கமானது (IASP), ஒரு மனநல மருத்துவரும் மற்றும் சென்னை SNEHA தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனருமான லட்சுமி விஜயகுமார் பெயரில் ஒரு விருதை நிறுவியுள்ளது.
  • 'நந்தலாலா' என்ற புனைப்பெயரால் பரவலாக அறியப்பட்ட பிரபலத் தமிழ் கவிஞரும் எழுத்தாளருமான நெடுஞ்செழியன் சிங்காரவேலு சமீபத்தில் காலமானார்.
  • ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில், 12வது பிராந்திய 3R மற்றும் சுழற்சிப் பொருளாதார மன்றம் ஆனது ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் நடத்தப் பட்டது.
  • உலகின் உயிரி எரிபொருள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தினைப் பெற்று உள்ளது என்பதோடு ஜனவரி மாதத்தின் நிலவரப்படி, பெட்ரோல் எரிபொருளில் 19.6% எத்தனால் கலப்பு செய்யும் இலக்கினையும் இந்தியா அடைந்துள்ளது.
  • எரிபொருள் கலன் தொழில்நுட்ப மையம் (CFCT) ஆனது, தொலைத்தொடர்புச் சேவை பரப்பு கோபுரங்களுக்கு நம்பகமான மாற்றீட்டுத் தீர்வாக ஹைட்ரஜனில் இயங்கும் எரிபொருள் கலன்களை வெற்றிகரமாக செயல் விளக்கிக் காட்டியுள்ளது.
  • மத்தியப் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகம் ஆனது, புது டெல்லியில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் தேசிய அளவில் ஆன ஒரு பயிலரங்கத்தினையும் ஏற்பாடு செய்துள்ளது மற்றும் "சஷக்த் பஞ்சாயத்து-நேத்ரி அபியான்" என்ற திட்டத்தினையும் தொடங்கியுள்ளது.
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சகமானது நிதி ஆயோக் என்ற அமைப்புடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) மாணவிகளுக்கு கட்டமைப்பு சார் ஆதரவினை வழங்குவதனை நோக்கமாகக் கொண்ட ஸ்வவலம்பினி திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • அகமதாபாத் மாநகராட்சிக் கழகமானது, பருவநிலை நடவடிக்கைக்காக சுமார் 5,619.58 கோடி ரூபாயை ஒதுக்கியதுடன் அதன் நிதிநிலை அறிக்கையில் பருவநிலை தொடர்பான அத்தியாயத்தினை உள்ளடக்கிய இந்தியாவின் முதல் உள்ளாட்சி அமைப்பாக மாறியுள்ளது.
  • குஜராத்தின் ஜுனாகத் நகரில் அமைக்கப்பட உள்ள வனவிலங்குச் சுகாதாரம் மற்றும் நோய் மேலாண்மை தொடர்பான பல்வேறு அம்சங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகத்திற்கான ஒரு மையமாக செயல்பட உள்ள வனவிலங்குகளுக்கான தேசியப் பரிந்துரை மையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7வது கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்