பத்திரிகையாளர்கள் நக்கீரன் R.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதினை தமிழக முதல்வர் வழங்கினார்.
மனித-வனவிலங்கு மோதலைத் திறம்பட நிர்வகிப்பதற்காக, கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) இந்திய வனவிலங்கு கல்வி நிறுவன வளாகத்தில் ஒரு சிறப்பு மையம் நிறுவப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது அதன் வளாகத்தில், 'விபத்துகளற்ற' சூழலை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் வகையில், அரண் எனப்படும் ஒரு கைபேசி சார்ந்தப் பாதுகாப்புச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
"பார்வை குறைபாடுள்ள நபர்கள் நீதித்துறையின் கீழ்நிலை பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்க மிகத் தகுதியுடையவர்கள்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து குறைபாடு அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான உரிமையை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரித்து தீர்ப்பளித்துள்ளது.
404.991 லட்சம் ரூபாய் செலவில் 17 புதிய மரகதப் பூஞ்சோலை அல்லது கிராம வனப் பகுதிகளை உருவாக்குவதற்குத் தமிழக அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்த மூன்றாம் கட்ட மேம்பாட்டுடன் சேர்த்து இங்கு கிராமங்களில் உள்ள மொத்த மரகதப் பூஞ்சோலைகளின் எண்ணிக்கையானது 100 என்ற அளவை எட்டி பசுமை தமிழ்நாடு திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையைக் குறிக்கிறது.
நான்கு நாட்கள் அளவிலான 2025 ஆம் ஆண்டு உலக கைபேசி மாநாடானது (MWC) ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், "Converge, Connect, Create" என்ற முக்கிய ஒரு கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
சீனாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் லியு ஜியாகுனுக்கு 2025 ஆம் ஆண்டு பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு வழங்கப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு உதவுவதற்காக டிராகன் கோபைலட் எனப்படுகின்ற ஒரு புதிய குரல் வழி கட்டுப்பாடு கொண்ட செயற்கை நுண்ணறிவு உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.