பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, LCA தேஜாஸ் எனப்படும் இலகுரக போர் விமானத்திற்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த உயிர்காப்பு அமைப்பின் (ILSS) உயர் மட்ட உயரச் சோதனைகளை வெற்றிகரமாக மேற் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, மிக நீண்ட தூரப் போக்குவரத்து தீர்வுகளுக்கான அவற்றின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்காக என்று, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கனரக சரக்குந்துகளின் முதல் சோதனை ஓட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR), ஒரு ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கான (RIM) முறையாக கட்டமைக்கப்பட்ட நெறிமுறை சார்ந்த சுகாதாரக் கட்டமைப்பை வழங்குவதற்காக வேண்டி, மனிதப் பங்கேற்பினை உள்ளடக்கிய உயிரி மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கான ICMR தேசிய நெறிமுறை வழிகாட்டுதல் விதிகளின் (2017) பின் இணைப்பை வெளியிட்டுள்ளது.
மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலை எதிர்த்துப் போராடுவதற்காக மார்ச் 04 ஆம் தேதியன்று பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கான உலக தினம் அனுசரிக்கப் படுகிறது.